‘All the world is a stage’ – We had ‘As You Like It’ for my 10th std English syllabus and these words have always stuck with me. I never thought I would actually get to use the sentiments expressed in a pallavi! ( Ulagame oru medai, athil aadubavar naame – உலகமே ஒரு மேடை, அதில் ஆடுபவர் நாமே) Yesterday was the launch of a new performance space in Alwarpet Chennai – Medai (the world literally translates to Stage) by Charles and his dynamic young team. Of course getting back on stage, singing a concert in front of a live audience was by itself the first step towards a semblance of normalcy in my life.
As we were setting up the audio before the concert, Venkatesh remarked “this feels so much like a concert in Germany or France!” We have performed in similar compact black box type places in Europe. To actually meet you all in person once again with them on a similar performance space was so fulfilling! To be fresh musically during a period like the last 18 months could not have been possible without Varadarajan and Venkatesh. We talked music, met up for banter sessions, recorded digital concerts and played board games. My students Swarnarethas and Rahul Krishna ensure that my manual tambura is my only source of sruti in my concerts.
MT Aditya, my sound guy, probably inspired by that goosebumps inducing GNB/TNK/Pazhani video floating on social media, had put a retro microphone on stage. Bhargavii Mani (who singlehandedly has transformed the way I am approaching my online presence and activity) insisted on bringing her crew in to record the concert on video. It was so refreshing to see all of you spontaneously turning up. It encourages me and my team to work on trying to put a few more concerts in the near future. There is still lack of clarity over the music season this year. However, yesterday has given me the encouragement I need to at-least set the ball rolling.
Thanks for your patience, thanks for your love/likes and thanks so much for your support to all my online activity, especially the Sanjay Sabha membership on my YouTube channel (http://www.youtube.com/sanjaysub/join) and thanks so much for actually turning up and clapping – it’s been 18 months since I heard the sound of live applause!

Wonderful
Please make this concert revording available on Sanjay Sabha.
Review of Naradha Gana Sabha concert on 11.12.2021
S. Krishnan
9677033558
krishnanseshadri58@gmail.com
11-12-2021
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய வித்வான் BHARATHI BIMBAM ஸ்ரீ சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுக்கு பாதூர் கிருஷ்ணன் உளம் மகிழ்ந்து எழுதுவது.
தங்களின் வெறிகொண்ட ரசிகன் நான். தங்களின் கச்சேரிகளை அதிகமாக கேட்பதில் உளம் மகிழ்வேன். நான் 1975 முதல் செம்மங்குடி மாமா, மதுரை சோமு, எம் எல் வி அம்மா, டிகே ஜெயராமன், டிகே பட்டம்மாள், லால்குடி சார், போன்ற பிரபலமானவர்களின் கச்சேரிகளை இடைவிடாது சபாவிற்கு சென்று குழுவாக கேட்டு வருவேன். அந்த வரிசையில் தாங்களும் என் மனதில் முன்னிலையில் உள்ளீர்.
ஆழ்வார்பேட்டை “மேடை” என்னும் அரங்கில் கடந்த மாதம் நடந்த கச்சேரிக்கு வந்து உளம் மகிழ்ந்தேன். இன்று நாரத கான சபா நிகழ்ச்சிக்கும் வந்து என்னை இழந்தேன்.
தங்களின் கன ராகங்களை மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன், இருப்பினும் தங்களின் தமிழ் அகவல்கள், திவ்யப்ரபந்தம், தேவாரம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் குறிப்பாக பாரதியின் அனைத்து பாடல்களும் என்னை கட்டிபோட்டுவிடும். அதற்காக தங்களை “பாரதி பிம்பம் சஞ்சய் சுப்பிரமணியம்” என்று அழைக்க ஆசைப்படுகிறேன். பாரதியின் எண்ணத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகள் அத்தனையும் கசக்கி சாறாக எங்களுக்கு தருகிறீர்.
தங்களின், துன்பம் நேர்கையில், பாயும் ஒளி நீ, மல்லாரி, பணமே மிகவும் குறிப்பாக சின்னஞ்சிறு கிளியே அனைவரது மனதையும் கட்டிப்போடும்.
இன்று நாரத கான சபாவில்
விரிபோனி – பைரவி – கண்ட சப்பு அட தளம் ஆகா …. ஆரம்பமே களை கட்டிவிட்டது
ரகுநாயக – எப்பொழுதும் போல் ராக பாவம்
பாமாலை -நேர்த்தியான ஆலாபனை.. தமிழ் நாடு என்பதை விஸ்தாரமாக ப்ரஸ்தாரம் பண்ணிய விதம் அருமை. ஸ்ரீ மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் தினமணி வம்ச வை ஞாபகப்படுத்திவிட்டது.
ஸ்ரீ ராஜகோபாலன் மிகவும் அழகாக பொறுமையாக நடந்து வந்ததை கண்டேன்
BETTADA MEMONDU – நாராயணி மிகவும் அழகாக அதன் கவர்ச்சி முழுவதும் எங்களை ஈர்த்தது
பூலோககுமாரி ரஞ்சனியில் பவனி வந்து பாரதி புகழ் பாடியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது
RTP : என் மனதிற்கு பிடித்த ராகம் Revathi. வேதம் போல் கேட்கக்கூடிய ராகம். பாரதிக்கு நிகர் இரட்டை கிளையில் துள்ளி விளையாடியது. ஒன்று தள்ளி எடுக்கும்போது என் உடம்பும் சேர்ந்து ஆடுவதை என்னால் தடுக்க இயலவில்லை. ராக ஆலாபனையின் போது மேல் ஸ்தாயியில் மூச்சு விடாமல் பாடியது மதுரை சோமு தோடி பாடும்போது நாதஸ்வர பாணியில் பாடுவது போல் இருந்தது. மிகவும் அற்புதம். ஹாட்ஸ் ஆப்.
ஹரீரிக – பெஹாக் – அற்புதம்
இடை செருகல் சின்னஞ்சிறு கிளியே. என் மனமும் அதையே கேட்கலாமா என்று ஏங்கியிருந்தது. பாயும் ஒளிக்கு முன்னால் பாரதியின் உயிர் பாடலான சின்னஞ்சிறு கிளியே. எப்படி துள்ளியது. முத்தத்திற்கு கொஞ்சியது. பாவத்தில் கெஞ்சியது. எல்லா பாடலையும் இது மிஞ்சியது. இதற்காகவே உம்மை “பாரதி பிம்பம்” என்று நான் அழைப்பேன்.
அந்த உணர்ச்சி மறைவதற்குள் தீர்த்த கரையினிலேவில் வார்த்தை தவறி விட்டாள் கண்ணம்மா.. அடி கண்ணம்மா. அடி கண்ணம்மா. அந்த சோகத்தை அற்புதமாக மேடையேற்றி எம்மை கலங்க வைத்துவிட்டீர்.
கலைமாமணி லால்குடி அவர்களின் தில்லானா. உங்கள் இசையில் உள்ளம் புகுந்து குடைந்து வெளி வந்துவிட்டது,
தமிழ் மொழியின் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பாரதியின் மீதும் வைத்துள்ள அன்பும் மரியாதையும் கண்டு தமிழ் நாடே உம்மை ஒரு நாள் பாராட்டும் என்பதில் ஐயம்மில்லை.
இறுதியாக தங்களின் வாழிய செந்தமிழ் பாடலுக்குண்டான இடைவிடாத கைதட்டல் சும்மா அதிர்ந்தது இல்ல … அது உங்களின் மொத்த கச்சேரிக்குமானது என்பதில் சந்தேகமில்லை.
தங்களுக்கென்றே பக்காவான பக்கவாத்யத்தை என்றும் மாற்றாமல் பயணிக்கும் உமது பண்பை போற்றுகிறேன். அற்புதமான கலைஞர்கள். சிரித்த முகத்துடன் வெங்கடேஷ் பலராமனின் மிருதங்கமும் அமைதியாக அருமையாக இணைந்து வாசிக்கும் வரதராஜன் சந்தானம் அவர்களும் கஞ்சீராவில் அனிருத் ஆத்ரேயா அவர்களும் தங்களின் கச்சேரிக்கு மெருகு ஏற்றுகிறார்கள் (அமைதியாக, தனியாக வாசிக்காமல், இணக்கமாக வாசிப்பதில்)
வாழ்க உமது தமிழ். வாழ்க பாரதியின் பெருமை. வாழ்க தமிழ் நாடு. வளர்க்க உமது இசை பயணம். வாழ்த்துக்களுடன்.
கிருஷ்ணன்
பாதூர்.
பி.கு : திரு வரதராஜன் சந்தானம் எனது உறவினர் என்று பெருமைப் படுகிறேன்